இனியவளே !
இன்பக்கனி ஆனவளே !
என் உலகம் நீயென
எண்ணியிருந்தேன்..
துன்பம் தந்தென்னை
துரத்துவதேன்..
வந்த சொந்தங்கள்
விலகியபோதும்
உன் விழிகளில் எனக்கு
அடைக்கலம் தந்தாய்
செவிகளில் நீங்கிடா
சிரிப்பு உதிர்த்தாய்...
தாய் போல் தயைகூர்ந்தாய்
தோழியல்ல நீ..
ஒரு நொடியும்
பிரிய மறுக்கிறது
என் மனம்...
இதயத்தில் புகுந்த
உன்னை எடுத்திட
நான் இறக்கும்வரை
காத்திரு...
என் கல்லறைக்கு
வந்து தோண்டிப்பார்...
இருதயம் துடித்திடும்
உன் விரல் பட்ட நோடியினில்..
வலிகள் கூட வசந்தமாகும்
நீ என் வாசல் தேடி
வரும் வேளையில்...
மணித்துளிகள் நொடியாகும்
உன் இதழ்கள் பேசிடும்
வேளையில்...
அழகியே !
நான் அறிவிலியே...
மூத்தவள் என்றால் என்ன
இளையவள் என்றால் என்ன
என் இனியவள் நீதானே...
சாதித்திட துடிக்கும்
சர்ப்பம் தான் நான்
பணிமனையும் எனக்கு
பாரமானது...
சாய்ந்திட உன் தோள்கள் இன்றி....
கோதிவிடும் கைகளுக்கு
எங்குகின்றேன்...
உன் விரல் நுனி
என்மேல் பட்டதும்
மோட்சம் அடைவேன் என்று...
சூடிடும் போவினில்
ஒரு இதழாய்
இருந்திட விரும்புகின்றேன்...
நீ ஆசையுடன் என்னை
சூடிடுவாய் என்று...
நெற்றியில் ஒட்டிடும்
பொட்டாய் இருந்திட
விரும்புகின்றேன்...
ஒட்டியிருப்பது ஒருநாள்
என்றாலும்
துளித்துளியாய் தோன்றிடும்
வியர்வைதுளிகள் என்னை
நனைத்திடும் என்று...
உன் செவிகளில் அணியும்
காதணியாய் இருந்திட
விரும்புகின்றேன்...
நீ சிரித்திடும் ஒலியினை
உனக்கு முன் கேட்டிட
வேண்டும் என்று.......
உன் கைகளில் அணிந்திடும்
கடிகாரமாய் இருந்திட
விரும்புகின்றேன்...
உன் இதயத்தில் அடைபட்டு
ஓடிக்கொண்டிருக்கும்
என் உயிர்தனை
ஒருமுறையாவது
பார்த்திடுவாய் என்று....
உன் கால்களில் அணிந்திடும்
கொலுசாய் இருந்திட
விரும்புகின்றேன்...
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
கவனமாய் நட என்று
கரையும் என் குரல் கேட்பாய் என்று..
நீ கட்டழகு காட்டிடும்
உன் வீட்டு கண்ணாடியாய்
இருந்திட விரும்புகின்றேன்...
உன்னை அறியாமல்
உன் அழகில் கரை ந்திட வேண்டும் என்று...
நீ குளித்திடும் வேளையில்
பொழி ந்திடும் நீர்துளியாய்
இரு ந்திட விரும்புகின்றேன்..
மண்ணில் வீழ் ந்தாலும்
உன்னில் சரி ந்தேன் என்பதை
நீ உணர மாட்டாயா என்று...
துவட்டிடும் துணியாய்
இருந்திட விரும்புகின்றேன்..
உன் மேல் இருக்கும்
துளிகளால் வெந்து கிடக்கும்
என் மனதினை நனைப்பாய் என்று...
உன் பாதங்களில் அணிந்திடும்
பாதணியாய் இருந்திட விரும்புகின்றேன்...
உன்பிஞ்சு பாதங்களை
நஞ்சு தீண்டாமல்
காத்திட என் உயிர் பிரியும் வரை
போராடிடுவேன் என்று...
நீ படித்திடும் புத்தகத்தின்
பக்கங்களாய் இருந்திட
விரும்புகின்றேன்...
பரிச்சை நேரத்திலாவது
என்னை தீண்டிடுவாய் என்று...
நீ எழுதிட உபயோகிக்கும்
எழுதுகோலாய் இருந்திட
விரும்புகின்றேன்...
நீ வளைத்திடும் வழியெல்லாம்
வரை ந்திடுவேன் என்னை
என்றே உன் வழி அறியாதா என்று....
உன் பிறை இடையினில்
மீண்டும் பிற ந்திட விரும்புகின்றேன்...
இம்சை செய்தாலும் நான்
உன் இனியவனாக
இரு ந்திட வேண்டும் என்று...
நான் உன்னிடம்
எதிர்பார்க்கும் அன்பை
நீ அப்பொழுதாவது தருவாய் என்று...
என்வாழ்வின் இரண்டாம் பாகத்தில்
வருவாய் என்றெண்ணினேன்...
நீ விரும்ப வில்லை என்றால்
இப்பொழுதே சொல் இறந்து பிறக்கிறேன்
உன் கருவில்...
0 comments:
Post a Comment